×

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக அரவக்குறிச்சி பகுதியில் இளநீர் விற்பனை விறுவிறுப்பு

அரவக்குறிச்சி, மே 8: அரவக்குறிச்சி பகுதியில் இளநீர் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. சாதாரண காலங்களை விட தற்போது கடும் வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் இளநீர் விற்பனையும், விலையும் அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் இளநீர் அதிக அளவு விற்பனையாகும். இளநீர் வெப்பத்தை தணிக்கக்கூடிய இயற்கை பானமாகும். தென்னை மரத்திலிருந்து இளநீர் எல்லாக் காலமும் கிடைக்கும் என்றாலும் வெயில் காலத்தில் இதன் தேவை அதிகரிக்கும். வெயில் காலத்தில் அதிக அளவு வியர்வையின் மூலம் நீர் சத்து குறைந்து உடல் சோர்வாகும். அப்போது இளநீர் அருந்தினால் உடனடியாக புத்துணர்வு அடையலாம்.

பாட்டில் குளிர்பானங்களை விட இயற்கையான இளநீர் உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிறந்த பானமாகும். ஆகையால் கோடைகாலத்தில் தவிர்க்க முடியாததாக இளநீர் உள்ளது. சென்ற மாதங்களில் ரூ 35 க்கு கிடைத்த இளநீர் தற்போது ரூ50 ரூ 60 என்று விற்பனையாகின்றது. அடுத்து வரும் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாகும் போது இன்னும் விலை அதிகரிக்கும் என இளநீர் வியாபாரிகள் கூறுகின்றனர். கேரளா, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து இப்பகுதிக்கு இளநீர் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றது.

The post கொளுத்தும் வெயிலுக்கு இதமாக அரவக்குறிச்சி பகுதியில் இளநீர் விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Dinakaran ,
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...